நீ என் வாழ்வின்
பாதியில் அதிசயம்
மீதியில் ரகசியம்
நீ என் வாழ்வின்
பாதியில் அதிசயம்
மீதியில் ரகசியம்
இரு கண்கள் சந்திக்கும் நொடியில்
உலகமே மறைந்து போகிறது
நேசிப்பது காற்று போன்றது
அதை தெளிவாக
காண முடியாது
ஆனால் உணர முடியும்
மழையிலும் ஒளிவிடும்
தீபம் போல
காதலிலும் ஒரு
நீரான தீ உண்டு
இதயம் ஒரு புத்தகம் என்றால்
காதல் அதில் அழியாத கவிதை
உன்னை காணாமல் நான்
வருந்தி கவிதைகள் எழுதினேன்
ஆனால் கவிதைகளில் உள்ள
வார்த்தைகளோ உன் அழகு
காணாமல் வருந்துகிறது
உலகம் முழுதும் மறைந்தாலும்
என் இதயத்தின் இடுக்கில்
நீ என்றும் ஒளிவழி
ஆழுறக்கமோ மீளாதுயிலோ
உன் கரங்களுக்குள்ளேயே
அடங்கிட வேண்டும்
இருவர் இடையே
நிலவும் மௌனம் கூட
காதலை உரைத்துவிடும்
மழைதுளி விழும்
நேரம் கூட
அவளின் சிரிப்பு நினைவாகும்