இரவில் மூடிய கண்களில்
விரல் ஊன்றி கவரும் நினைவுகள்
வெறும் நினைவல்ல
இரவில் மூடிய கண்களில்
விரல் ஊன்றி கவரும் நினைவுகள்
வெறும் நினைவல்ல
என்
இதய துடிப்பில்
ஒலிக்கும்
உன் பெயரின்
ஓசையைவிட
அழகிய இன்னிசை
எதுவுமில்லை என்னுயிரே
அருகில் நின்று
மூச்சு கலந்து வரும் தருணமே
வாழ்க்கையின் இனிய கவிதை
மௌனத்தை மூடியது
ஒரு முத்தம்
அதற்குள் கதைகள் நூறாயிரம்
தோளில் சாயும் நிமிடம்
ஆயுள் முழுக்க
சுவாசமாக தங்கிவிடுகிறது
நீ நகர்ந்த
பின்பும்
எனை
நகர விடாமல்
கட்டி போடுகிறது
நாம் ரசித்த
நொடிகள்
என் இதயத்திற்கு
இறகுகளைப் படைத்து
உன்னைச் சுற்றியே
ஒவ்வொரு நொடியும்
என்னை பறக்கச் செய்கிறாயே
இணைபிரியாத நிமிடங்கள்
நினைவுகளாகவே
வாழ்ந்துகொண்டு இருக்கின்றன
வெயில் வெப்பத்தின்
தாக்கத்தை விட
உன் உடலுடன்
இணையும் பொழுது
உருவாகும் தாக்கத்தில்
இன்பமான வெப்ப மயக்கத்தை
உருவாக்கின்றது
ஒரே அறையில்
இருவரும் சாய்ந்திருக்கும் போது
இருதயங்கள் தான் உரையாடும்