தூரம் காதலை நீக்க முடியாது
அது நினைவுகளால் மட்டுமே
ஆழமாகிறது
தூரம் காதலை நீக்க முடியாது
அது நினைவுகளால் மட்டுமே
ஆழமாகிறது
நகைச்சுவையாக தொடங்கிய
உரையாடல்
காதலாக முடிவடைகிறது
புரிதல் என்பது
காதலின் அடிப்படை
அதில் நம்பிக்கை சேரும்போது
அது நிலையானது
உதட்டின் அருகே
நிற்கும் தருணம்
நேரத்தை நிறுத்தும்
வலிமை கொண்டது
இரவின் அமைதிக்குள்
காதலின் இரகசியங்கள்
மென்மையாக குலுங்கும்
எங்கோ மறைந்திருந்து
மாயங்கள் செய்கின்றாய்
குழம்பி தவிக்கின்றேன்
தெளிவற்ற நீரில்
பிம்பமாய்
எங்கே நீயென்று
கண்கள் கூட சொல்லாத
உணர்வுகளை
இதயம் மட்டும்
மெதுவாக எழுதித் தரும்
ஒரு நொடியை
கடப்பதே
பல யுகமாயிருக்கும் போது
பல்லாயிர நொடிகளை
கடந்து விடு
என்கிறாய் நீயின்றி
பொழியும்
மழையைவிட
உன் பார்வையின்
சாரலே
என்னை நனைத்து
செல்கிறது
விடுபட நினைத்தும்
விடைபெற முடியாமல்
தொடர் கதையாய்
தொடருது
உன் நினைவு
முடிவுரை புரியாமல்