சொற்கள் இல்லாமல்
பேச வைக்கும்
சக்தி தான் காதல்

நீயிருக்கும்
இடம் மட்டும்
எனக்காகவே ஆன
ஒரு சிறிய சொர்க்கம்

நீயின்றி என் உலகம்
வெறும் வெள்ளை
தாளாகவே உள்ளது

உடலைவிட
மனதைத் தீண்டும்
தொடுதல்தான்
உணர்வின் உச்சம்

மௌனத்தில் பேசும் வாசனை
ஆசையின் அழுத்தமான மொழிபெயர்ப்பு

இதயம் தேடிய அமைதியை
ஒரு சிரிப்பு மட்டும் கொடுத்துவிட்டது

விலகிய போதும்
விரட்டி வந்தே
வீழ்த்தி விட்டாய்
மீள முடியா
அன்பு கடலில்

இருவர் மட்டும்
பேசாத மௌனம் கூட
காதலின் மொழியாக மாறுகிறது

தினமும் நிழலாய்
தொடர்கிறேன்
நீ என் ஒளி என நினைத்து

சுவாசிக்கச் சில நொடிகள்
தாமதமானால் பரவாயில்லை
ஆனால் அவள் முத்தம்
தாமதமானால் இதயம் சிதறும்