கவிதைக்கு பொய்யழகு
என்பதும் பொய்பாகி
போகின்றது
நம் மெய்
காதல் கவிதையாகும்
போது
காதல் என்பது
பேசும் வார்த்தைகளில் இல்லை
கவனிக்கும் சிறிய
செயல்களில் இருக்கிறது
நினைக்க நினைக்க
பேரழகு
உன்னை போலவே
மனதில் நிழலாடும்
உன் நினைவுகளும்
என்னவனே
கரங்களின் தொடு
தேய்ந்த பின் கூட
மனதின் நெருக்கம் குறைவதில்லை
கை சேரும் நிமிடத்தில்
இதயம் சொல்லாத
வாக்குறுதிகளை கொடுக்கிறது
ஊடலின்
விரிசலை
காதலில்
நெய்கிறாய்
பார்க்கும் இடமெல்லாம்
துளிர்கிறது
உன் நேசம்
பேரன்பின்
பெருங் காதலாய்
சின்ன சின்ன சண்டையில்
இருந்து மீண்டும் புதுப்பித்துக்
கொள்கிறோம் எங்கள் காதலை
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்
தள்ளிச் சென்றாலும்
நினைவில் ஒட்டிக்கொண்டிருப்பதே
உணர்வின் ஆழம்
நீயின்றி
என்னுலகம்
நிறைவடையாது...
💖 பக்கம் 475 / 478
📋 Copied