சிரிப்பின் ஒளியில்
வாழ்க்கை புதிதாய் மலர்ந்தது
கிறுக்கலில் கூட
உன் பெயரின்
முதலெழுத்தை தான்
விரல்களும் கோலமிடுகிறது
நிசப்தமான தருணத்தில் கூட
இரு இதயங்கள் வார்த்தையின்றி
ஒருவரை ஒருவர் தேடி இணைகின்றன
காதல் ஒரு இசை
இரு மனங்களும்
அதில் கரைந்து ஒலிக்கின்றன
உதிர்ந்திடுமுன்
கொய்தெறிந்துவிட்ட
மலருக்காக
கண்ணீர் வடிக்கின்றது
வானம்...!
உன்னில் நானும்
என்னுள் நீயுமாக
வாழும் நமக்கு
தினமும் காதலர் தினமே
பார்த்த முகம்
மறந்து போகலாம்
ஆனால் பழகிய இதயம்
ஒரு போதும் மறந்து போவதில்லை
பாசம் பேசும் போது
சொற்கள் கூட
தன்னை மறந்து விடுகின்றன
நீ மெதுவாக
சிரிக்கும் போது
என் உயிரே வெட்கப்பட்டு
திரும்பிப் பார்க்கிறது
அருகாமை தரும் சுவாசம்
ஆயிரம் இசையை விட இனிமை
💖 பக்கம் 472 / 478
📋 Copied