அன்பு நம்பிக்கையுடன்
கலந்தால் அது வாழ்நாள்
பயணம் ஆகிறது
தொலைதூரம்
போனாலும்
மனதோரம்
ஆடுகின்றாய்
ஊஞ்சலாய்
விரல்களின் மென்மையான பயணம்
இதயத்தில் தீ மூட்டும் கவிதை
நினைத்தாலே இனிக்கும்
உன் நினைவில்
அவ்வப்போது
சிக்கி கொள்கிறது
என் நாணமும்
அன்பை விட
சண்டையே
அதிகம் என்றாலும்
மனம் சலிக்காமல்
தேடுகிறதே
விட்டு விட்டால்
மறைந்து போகும்
என்பதாலோ
உன் அழைப்புக்கு
காத்திருக்கும் ஒவ்வொரு
நொடியும் எனக்கு
அழகான தருணங்கள் தான்
காலங்கள் காத்திருப்பதில்லை
ஆனால் உன்னை
நேசிக்கும் உண்மையான
இதயம் உனக்காக
நிச்சயம் காத்திருக்கும்
கதிரவன்
கண் விழித்த
பின்னும்
உன் அணைப்பில்
கண் மூடி
கிடப்பதும்
சுகம் தான்
மனதை நம்ப வைத்த மனிதர் தான்
காதலின் உண்மையான கனவு
கண்மூடினால்
காட்சியாகிறாய் நீ
இருளில் நிலவாய்
கண்ணாடியில்
உனை ரசிக்கும்
தைரியம் ஏனோ
உன் முன்னாடி
இல்லை
என் கண்களுக்கு
💖 பக்கம் 460 / 478
📋 Copied