கேட்டுபெற விருப்பமில்லை
என் இதயம் புரிந்து நீ
வருவாய் என்ற நம்பிக்கையில்
காத்து கிடக்கிறது என் காதல்
புன்னகை ஒரு மின்சாரம்
இதயம் முழுதும் ஒளிரச் செய்கிறது
என் உயிரின் துடிப்பில்
ஒளிர்வது
உன் நினைவின் தீபம்
உதடுகள் பேசுவதற்கு
முன் கூட உடல் தன்
ரகசியத்தை வெளிப்படுத்தும்
இரவில் மூடிய கண்களில்
விரல் ஊன்றி கவரும் நினைவுகள்
வெறும் நினைவல்ல
விரல்கள் தடவும்போது
மனது மட்டும் அல்ல
உடலோடு கனியும்
காதலில் தோற்றவர்கள்
தோற்றதற்காக அழவில்லை
இன்னும் அந்த நினைவுகள்
தொடர்கிறதே என்பதற்காக
தான் அழுகிறார்கள்
உன் எதிர்பார்பில்
யாருமிருக்கலாம்
என் எதிர்பார்பில்
நீ மட்டுமே
விரும்பி கொடுப்பதில்
வாழ்கிறது உன் மீதுள்ள
என் ஆழமான
காதல்
உன் வருகையறிந்து
மல்லிகையும்
மயங்கிக்கிடக்கு
எனை
முந்திக்கொண்டு
நாணத்தில்
தலை கவிழ்ந்து
💖 பக்கம் 455 / 478
📋 Copied