💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
என்றோ தொலைத்த
உன்னை அருகாமையில்
தேடுகிறது என் இதயம்
content_copy
விரல்கள் தொடாத இடத்திலும்
விருப்பத்தின் அலைகள்
இரத்தத்தை வெப்பமாக
அலைக்கழிக்கின்றன
content_copy
காலம் கடந்தாலும்
நேசத்தின் அலை மனதில்
சீராக வந்து
அமைதியை பரப்பும்
content_copy
நீயில்லா
நேரங்களில்
உன்
நினைவுகளைத்தவிர
வேறெதற்கும்
அனுமதியில்லை
என்னருகில்......
content_copy
சிரிப்பின் பின்னால்
ஒளிந்திருக்கும் ஆசைதான்
உண்மையான காதல்
content_copy
காலம் கடந்தும்
உன் நினைவுகள் மட்டும்
என் இதயத்தில்
ஈரமாகவே இருக்கின்றன
காயாத கவிதை நீ
content_copy
கைகளில்
கனஏட்டை தாங்கியிருந்தாலும்
என் மன ஏடு
ஏந்தியிருப்பது உனையே
content_copy
அளவுக்கு மிஞ்சினால்
அமிழ்தமும் நஞ்சாமடா
எனக்கு அமிழ்தமாகவே
தெரிகிறது உன் முத்தம்
அளவுக்கு மிஞ்சினாலும்
content_copy
உதடுகள் பேசாமல் சொல்வது
ஆசையின் தூண்டும் மொழி
content_copy
இந்த ஏமாற்றத்திற்கும்
வலிக்கும் காரணம் அன்று
உனக்காக என்னை மாற்றிக்
கொண்டது மட்டுமே
💖 பக்கம் 429 / 478
arrow_back
arrow_forward
📋 Copied