அன்பை வெளிப்படுத்தும் வழிகளில்
ஒன்று தூரத்தில் இருக்கும்
உன்னை இந்த செய்தியை
வாசிக்க செய்வது
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
என் சொர்கத்தை
எங்கும் தேட தேவை
இல்லை
உன்னை சற்று
நினைத்தாலே போதும்
கனவில் வந்தது
நீயென்றால்
கலைந்த கனவை
மீண்டும் தொடர்வேன்
கண் மூடாமலேயே
விடியாத இரவு வேண்டும்
அதில் கலையாத
கனவு வேண்டும்
அந்த கனவிலாவது
நீ எனக்கு வேண்டும்
யாருக்காகவும் என்
வாழ்க்கையில்லையென்ற
எண்ணத்தை மாற்றி
உனக்காகவே என்
வாழ்க்கையென்று
காத்திருக்க வைத்துவிட்டாய்
கைகளின் மென்மையான
தொடுதலில்
இரவுகளும் உருகின
இரு இதயங்கள்
பேசும் மெளனம் தான்
உண்மையான காதல் மொழி
எதேட்சையாக ஏனும்
கண்ணில் பட்டுவிடாதே
உனை எதிரெதிரே
சந்திக்கும் வலிமை
எனக்கில்லை
சில கணம்
மூழ்கினாலும்
உன்னன்பில்
பல யுகம்
வாழ்ந்த மகிழ்வு
மௌனத்தில் வீசும் சுவாசம் கூட
காதல் கவிதையைப் போல் இருந்தது
💖 பக்கம் 427 / 478
📋 Copied