தொடாத கைகள் கூட
உணர்வால் இணைந்திருக்க முடியும்
கனவிற்க்கும் நிஜத்திற்க்கும்
ஒரு வித்தியாசம்
கனவில் என் அருகில் நீ
நிஜங்களில்
உன் தொலைவில் நான்
மனதோடு மறைத்து
வைத்த காதல்
கிளையில் இலையாய்
படர்கிறது
கண்களுனை கண்டு
விட்டால் விழிகளில்
மென்மையான தொடுதலில்
பசுமை மலரும் போல
இரு இதயங்கள்
ஒருவரை ஒருவர்
நேசத்தில் கரைக்கின்றன
தொல்லையென
நினைத்தேன் உன்னை
தொலைந்துபோனேன்
நானே உன்னில்
நிழலின் நடுவே கூட
காதல் மென்மையான ஒளியாக
இதயத்தை ஒளிரச் செய்கிறது
அழைப்பை நீ யெடுக்க
தாமதித்தால் துடிக்குது
அதிகமாய் மனமும்
என்னவோ ஏதோவென்று
அணைப்பதற்கு கைகள்
அழுவதற்கு கண்கள்
சாய்ந்து கொள்ள ஒரு மடி
அதுவும் நீயாக இருந்தால்
இதயம் மட்டுமல்ல
உயிரையும் கொடுப்பேன்
தொட்டும் தொட்டாமலும்
இடையே ஒரு கனிந்த
உணர்வு நிறைந்தது
கனவா நிஜமா
என்றுணரமுடியா
இதமான
ஓர் உணர்வு
எதிர்பாரா
உன் அரவணைப்பு
💖 பக்கம் 424 / 478
📋 Copied