💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
என்னில்
தேங்கி கிடக்கும்
உன் நினைவில்
நீந்திக் கொண்டிருக்கு
என் காதலும்
கரை சேர்ப்பாய்
நீயென்றே
content_copy
நீயோ வெகு தூரத்தில்
உன் நினைவோ
என் விழியோரத்தில்
content_copy
சுவாசங்களின் இசை
இரு உடல்களையும்
ஒரே ராகத்தில் ஆட்டுகிறது
content_copy
அருகிலிருக்கும் நேரங்களில்
மட்டும் அல்ல
நினைவுகளில் கூட
காதல் துளிக்கிறது
content_copy
அசைப்போடும்
நினைவுகளோடு
அசையாது காத்திருக்கு
விழிகளும்
பல ஆசைகள் கொண்டு
ஆவலோடு உனக்காக
content_copy
கடிகாரமாய் நீயிரு
நொடி முள்ளாய்
உனை தொடர்ந்தே
நானிருப்பேன்
content_copy
கண்களால் நிகழும்
உரையாடல்
இதயத்தைக் கணிக்கும் கவிதை
content_copy
மெல்லிய காற்று கூட
அவளின் நினைவை
சொல்லி விடுகிறது
content_copy
கண்களுக்கு அருகில்
இருப்பனத விட
இதயத்திற்கு அருகில்
இருப்பது நான் காதல்
content_copy
ஆயுள் ரேகையை
பற்றி கவலையில்லை
உன் கை ரேகையோடு
இணைந்திருப்பதால்
💖 பக்கம் 418 / 478
arrow_back
arrow_forward
📋 Copied