💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
உனது வருகையே
நிர்ணயிக்கும்
எனக்கான
மணித்துளிகள்
உறைவதையும்
உருகுவதையும்
content_copy
பார்க்கும் தூரத்தில்
நீயில்லை என்றாலும்
உனை எதிர்
பார்த்திருப்பதை
நிறுத்தவில்லை
விழிகள்
content_copy
வாழ்வின் வெறுமையை
நிரப்புவது
உண்மையான காதலின்
ஓர் அரவணைப்பே
content_copy
குடிசையில் வாழ்ந்தாலும்
உன் மன மாளிகையில்
அரசி நானே
content_copy
உன் கண்களில்
எனக்கான இடம்
பார்த்தபோதே
என் இதயம்
உன் வசம் சிக்கியது
content_copy
தோளின் வெப்பம்
அருகில் வந்தால் இரவு கூட
மென்மை அடைகிறது
content_copy
மறக்க நினைக்காத
நினைக்க சலிக்காத
உறவென்றால் அது
நீ மட்டுமே
content_copy
கடந்து செல்கிறது
நீள் இரவு
அவள் நினைவுகளின்
துணையாலும்
இதமளிக்கும் இசையாலும்
content_copy
உயிரை தாண்டி
நினைவில்
நிற்கும் நினைவுகள்
காதலின் அடையாளம்
content_copy
சொற்கள் பேசாத நேரம் தான்
ரொமான்ஸ் பேசும் சிறந்த தருணம்
💖 பக்கம் 401 / 478
arrow_back
arrow_forward
📋 Copied