தூரம் இருந்தாலும்
துடிப்பின் நடுநடுப்பில் அவள்தான்

இதயம் தன்னால்
எழுதப்பட்ட பெயரை
வாழ்க்கை அழிக்க முடியாது

எதை வாசித்தாலும்
அங்கு வரிகளாக
வந்து நிற்பது
நீ பேசும்
வார்த்தைகளே

அழகிய கனவுகளாய்
உன் நினைவுகளை
போர்த்தி கொள்கிறேன்
நீ சென்ற பின்

மறக்க நினைக்கிறேன்
உன்னோடு
பேசாத நாட்களை அல்ல
பேசிய அந்த நாட்களை

சந்தோச தென்றல்
சன்னல் வழியே
சாமரம் வீசினாலும்
புலம் பெயர்தலின் வலி
பூக்கள் மட்டுமே அறியும்

உன்னுள் நான்
முழுநிலவுக்குள்
மூழ்கியிருக்கும்
மூன்றாம்பிறையாய்

முகம் பார்த்து பேசாமல்
இதயம் பார்த்து
நம்புவது தான்
உண்மையான காதல்

கைபிடிக்கும் தருணம்
ஒரு வாழ்க்கையே போல் நீள்கிறது

இதயம் பேசும் மொழி காதல்
அதற்கு சொற்கள் தேவையில்லை