பார்வையின் நெருக்கத்தில்
உடல் காந்தமாய்
இழுத்துக் கொள்கிறது
நெருக்கம் சில நேரம்
சொர்க்கத்தை விட
உணர்ச்சியாக இருக்கும்
கோடையும்
மார்கழியே
உன்னருகில்
சில நினைவுகள்
பேசத் தெரியாது
ஆனால் அவை தினமும்
என் இதயத்தை
வருடுகின்றன
விரல்கள் தொடும் பாதை
மனதின் எல்லைகளையும்
எரித்து விடுகிறது
பதற்றம் நீங்கியது
இன்னும் பல
கனவுகள் நின்றாடுது
உனைத்தேடி
வாசலில் காத்திருக்கிற காற்றும்
அவள் வாசனைதான் போல இருந்தது
காதல் மொழியில்
பேசியே கண்களால்
என் விழியிலும்
கலந்துவிட்டாய்
காதலை
அத்தனையும்
ஜெயித்து விட்டதாய்
மனம் பட்டென
நீ தோள் சாய
அனலான
உன் நெருக்கத்தில்
தணலாகுது மனம்
அணைத்துவிடு
கொஞ்சம் குளிரட்டும்
இரவும் குளிர் நிலவாய்
💖 பக்கம் 390 / 478
📋 Copied