உன்னிடம் பேசாத ஒரு நாள்
முழு நாளே incomplete-ஆ தோன்றுகிறது
தொடாத தொட்ட
உணர்வு கூட
நரம்புகளில்
தீப்பொறி போல பரவுகிறது
சில சமயம்
நீ என்னைப் பார்க்காத
போது தான்
நான் உன்னை
அதிகமாக நேசிக்கிறேன்
அந்தப் பார்வையில்
எதிர்பார்ப்பு இருப்பதில்லை
அன்பு மட்டுமே இருக்கிறது
அடுக்கடுக்காக கட்டி வைத்த
ஆசை மூட்டைகளை கொட்டி
தீர்க்க காத்திருக்கிறேன்
உன் கண் அசைவுக்காக
அணைத்து கொள்ளும் நொடி
உணர்ச்சிகள் பேசும்
மொழியாக மாறும்
கண்ணிலே தங்கிய
அந்த இரவு
இதயத்தில் இன்னும் மினுக்குகிறது
சிரிப்பு அவளின்
உதட்டில் தங்கும்போது
உலகம் மெதுவாகி விடுகிறது
மெல்லிய சிரிப்பு
மென்மையான மூச்சு
இரண்டும் கூடும் போது
காதல் தீவிரமாகிறது
நெருக்கம் வெறும்
உடலோடு அல்ல
இரு உயிர்கள் ஒன்றாக
சுவாசிப்பதே ரொமான்ஸ்
ஓய்வென்பதே
கிடையாது
உனை நேசிப்பதில்
மட்டும்
என் மனதுக்கு
அன்பே
💖 பக்கம் 377 / 478
📋 Copied