தொடு திரையிலும்
தொட்டிழுக்குறாய்
மனதை
காந்த பார்வையில்
நீ என்னை தொடும் போது
நேரமும் நொடியாக மாறிவிடுகிறது
மூச்சுகள் ஒன்றோடொன்று
கலக்கும் நேரம்தான்
இருவரும் உண்மையில்
ஒன்றாகும் தருணம்
மார்கழி மாலை மஞ்சள்
வெளிச்சத்தில்
உன் குரல் மெல்லிசை
போல் ஒலிக்கிறது
என் காதலும்
அழகு தான்
உன் இதயமெனும்
கருவறைக்குள்
சுவாசிப்பதால்
நீ என்னிடம் பேசவில்லை
என்றாலும் உன்
நினைவுகள் மட்டும்
என் மனதில் இருந்து
கொண்டே தான் இருக்கும்
மூச்சை தொட்ட உணர்வுகள்
காமத்தின் முத்தமாக நெஞ்சில் விழும்
பார்வைகள் மோதிய தருணம்
இதயம் மயங்கியது
மறுவார்த்தை பேசாதே
என்றவன்
விழி வார்த்தையை
ரசித்தான்
நிறுத்தாதே என்று
அருகில்
நீயில்லையென்று
மனதுக்கு தெரிந்தாலும்
எங்கோ உன் பெயர் ஒலிக்க
விழிகளும் தேடவே
செய்கிறது உன்னை...
💖 பக்கம் 367 / 478
📋 Copied