இந்த நொடிகள்
போதும்
நீயுடனில்லா
நிமிடங்களில்
என் நாழிகையை
அழகாய் நகர்த்திட
உன் தேடல்
எதுவாகவும்
இருக்கட்டும்
என் தேடல்
நீயே
கலைந்து போகும் மேகமென
நினைத்த உன்னை இன்று
என்றும் நிலையான வானமாக
பார்க்கிறேன் உன் அன்பால்
உன் அன்பு
என்னை கட்டுப்படுத்தவில்லை
அது என்னை பாதுகாக்கிறது
காதலின் நெடு தூர
பயணங்கள் நெற்றி
முத்தத்தில் தொடங்குகிறது
அணைத்துக்கொண்டு
அருகில் இருப்பதும்
காதல் தான்
நினைத்துக் கொண்டு
தொலைவில் இருப்பதும்
காதல் தான்
மென்மையான உதட்டின் அருகில்
நேரம் கூட நின்றுவிடுகிறது
இதயம் கற்றுக் கொடுத்த
முதல் பாடம்
ஒருவரை காரணமின்றி நேசிக்கலாம்
தொலைவில்
நீ சென்றால்
நினைவில்
இரவும்
நீளமாகின்றது
உன்னில் தொலைய
தயங்குவதேயில்லை
உள்ளம் என்னிலையிலும்
💖 பக்கம் 360 / 478
📋 Copied