பார்வையின் நெருக்கத்தில்
உடல் காந்தமாய்
இழுத்துக் கொள்கிறது

தோளில் சாயும் ஒரு மென்மை
இதயத்தை முழுவதும்
உருக்கும் சக்தி

கண்கள் பேசும் மொழி
காதலின் எளிய சான்றிதழ்

பலரின் கண்கள்
உன்னையும் ரசிக்கலாம்
ஆனால்
என் விழிகளுக்கோ
உனை மட்டுமே
ரசிக்க பிடிக்கும்
கிருஷ்ணனின்
ராதையாய்

தனிமையும்
பிடித்துப்போனது
என்னுடன்
உன் நினைவுகளும்
வந்துவிடுவதால்

அம்பாய் துளைக்கும்
உன் அன்பிற்காகவே
எத்தனை முறை
என்றாலும்
இறந்து பிறக்கலாம்
என் அன்பே

மூச்சு மோதும்
அந்த நொடியே
காமம் கவிதையாக மாறுகிறது

நேரம் கடந்து
பேசும் நினைவுகள்
உண்மையான காதலின் அடையாளம்

தோலில் வழியும் விரல்கள்
காமத்தின் பெயரில்லா கவிதை

என்னோடு நீ
கூட இருக்கும் நேரம்
தான் என் வாழ்வின்
வசந்த காலங்கள்