நெஞ்சுக்குள் எழும்
ஒரே பெயர்
ஆயுள் முழுக்க
ஓர் காதலாகவே
நிலைத்து விடுகிறது
உனக்கு பிடிக்கும்
என்றால் மாறிடுவேன்
நீ கொஞ்சும் பொம்மையாக
உடலுக்கு உயிர்கூட சுமைதான்
நாம் உயிராக நினைக்கும்
ஓர் உயிர் நம்மை
மறந்து போகும் போது
முழுமையான
ஒருவரை தேடவில்லை
நமக்காக மாறத் தயாரானவளையே
விரும்பினேன்
தூரம் அதிகமானாலும்
உணர்வு இணைந்திருந்தால்
காதல் என்றும் பிரியாது
கண்கள் பேசும் மெளனம்
இதயம் உரைக்கும் உண்மை
காதலுக்கு அடையாளம்
விழியோடு
சேர்ந்த இமைப்போல்
இதய துடிப்போடு
கலந்திருப்பது நீ
என் சுவாசமாய்
இதயம் ஏற்றுக் கொண்டவனை
உலகம் மறுத்தாலும் பரவாயில்லை
மூச்சின் வெப்பம் கூட
மௌனத்தை எரித்து விடுகிறது
மௌனத்தில் கூச்சலிடும்
அந்த ஆசை
கண்களில் படிந்த
வியர்வையால் தெரியும்
💖 பக்கம் 208 / 478
📋 Copied