உன்
துடிக்கும் இதயமும்
தவிக்கும் நினைப்பும்
எனக்காகவே
இருக்க வேண்டும்

இதயம் இருப்பது
என்னமோ எனக்குள் தான்
ஆனால் அது துடிப்பது என்னமோ
உனக்காக மட்டும் தான்

தொட்டதிலிருந்து
சதம் எடுக்கும் உடல்
காதலின் பசியை
கட்டுப்படுத்த முடியவில்லை

சந்திப்பின் சிறு தருணமே
வாழ்நாள் முழுதும்
தாங்கும் நினைவாகிறது

இதமாக
வருடி செல்கிறது
உன் நினைவுகள்...
உனை
நினைக்கும்
போதெல்லாம்...
(இனிமையாக)

உன்னுடைய கைப்பிடியால்
என் கனவுகள் நிஜமாகிறது

கண்கள் சந்திக்கும்
ஒவ்வொரு தருணமும்
ஒரு கவிதையாக மாறுகிறது

அழகைக் கண்டது கண்ணால்
ஆனாலும் காதலானது இதயத்தால்

தொலைவில் இருந்தாலும்
நினைவின் அருகாமை
காதலை நெருக்கமாக்குகிறது

அடையாளம் தெரியாமல்
உள்ளத்தில் பதியவே செய்கிறாள்
அந்த நொடி தான் காதல் தொடக்கம்