உன்னை பார்க்காத நாட்கள்
நீளும் போதெல்லாம்
உன்னை பற்றி நினைக்கும்
நேரங்கள் அதிகமாகிறது

பார்வையில் விழுந்த
ஒரு நொடிதான்
வாழ்க்கையை மாற்றியது

அன்பு என்பது
இதயத்தின் மென்மையான மொழி

மெல்ல பேசும் வார்த்தைகள் கூட
உயிர்க்குள் பசுமையான
காதலை விதைக்கின்றன

கொஞ்சம் வெளிச்சம்
கொஞ்சம் இரவு
கொஞ்சம் காற்று
கொஞ்சம் மழை
கொஞ்சம் பயணம்
கொஞ்சும் விரல்களில்
நிறைய காதல்

என்னால் முடிந்த வரை
பயணித்து கொண்டே இருப்பேன்
உன் நினைவுகளுடன்

கனவிற்க்கும் நிஜத்திற்க்கும்
ஒரு வித்தியாசம்
கனவில் என் அருகில் நீ
நிஜங்களில்
உன் தொலைவில் நான்

காற்றைத் தொட முடியாது
ஆனால் உன்னால்
என்னைத் தொட முடியும் என்ற
உணர்வு அழகானது

சிரிப்பில் கலக்கும் பாசம்
வாழ்க்கையை மலரச் செய்கிறது

என்னை நேசித்ததிலும் சரி
என்னை அதிகம் நேசிக்க
வைத்ததிலும் சரி உனக்கு
நிகர் யாரும் இல்லை