காதல் தொடும் நொடி
வாழ்நாளின் வெறுமையை
நிரப்பும் நிரந்தர நினைவு ஆகிறது
மெல்லிசையிலும்
மெ(இ)ன்னிசை
உன் நினைவு
சிறு தீண்டலிலே
பிறக்கும் நடுக்கம்
அந்த ஆழமான
காதலின் கையொப்பம்
தூக்கத்தில் மட்டும் வராமல்
துடிப்பிலும் சேர்ந்து
இருப்பது தான் ஆழமான காதல்
மழைத்துளி தோலைத் தொட்டபோது
நீயே என்னை
அணைத்தது போல் தோன்றுகிறது
இரண்டு இதயங்கள்
பேசாமல் புரிந்துகொள்வதே
உண்மையான காதல்
சில பார்வைகள்
மௌனத்தை
காதலிக்க வைக்கும்
கோர்த்து வைத்த
வார்த்தைகளை
சேர்த்திட துணிவில்லை
உன் கண்கள் பேச
உன்னை காணாமல் நான்
வருந்தி கவிதைகள் எழுதினேன்
ஆனால் கவிதைகளில் உள்ள
வார்த்தைகளோ உன் அழகு
காணாமல் வருந்துகிறது
மெல்லிய புன்னகையில் கூட
மனம் தன்னையே கண்டடையும்
அற்புதமான பாசம் மறைந்திருக்கிறது
💖 பக்கம் 176 / 478
📋 Copied