பார்வையின் அழுத்தத்தில் கூட
ஒரு முழு இரவு உருக்குலைந்தது
பார்வையின் அழுத்தத்தில் கூட
ஒரு முழு இரவு உருக்குலைந்தது
பெயர் தெரியாமல்
மனதை கொள்ளை
கொண்டவர்தான்
காதலின் கலைஞன்
பாசம் சிலருடன்
மட்டும் பேசும்
சொற்கள் இல்லாமல்
கூந்தலை அலங்கரிக்கிறாய்
பூக்களில் மனமோ
கோர்க்குது ஆசைகளை
மாலையாய் நாம் சூடிக்கொள்ள
சுடர் இல்லாத நெருப்பும்
அவளின் நெருக்கத்தில்
தீவிரமாக எரிந்தது
உன் உதடுகளின் தேன்
எனை முழுவதும் மீட்டெடுக்கிறது
என்னவனுக்குள் தொலைந்த
நொடியிலிருந்து தினமும்
எனக்கு காதலர் தினமே
இனிய காதலர் தின
நல்வாழ்த்துகள் என்னுயிர் காதலா
அலைப்போல்
துள்ளி எழுந்து
பனிப் போல்
உருகுதே எனதுள்ளம்
உனை கண்டதும்
இருளில் பூத்த
கனவுகளை
ஒளியில் தேடுகிறேன்
எதிரில்
நீ நனவாக
கனவின்
நட்சத்திரங்கள்
இரவில் மட்டும் மின்னும்
ஆனால் சிலரின் நினைவுகள்
இரவெல்லாம் விழிக்க வைக்கும்