கண்களோடு நீ
கலந்ததிலிருந்து
காத்திருப்பும்
கடினம் தான்

உனக்கான வரிகள்
என்றால்
சற்று தயங்கிதான்
போகிறது
எழுதுகோலும் எழுத
பொய்கள் கலக்க
பிடிக்காமல் கவிதையில்

துடிப்பும் தவிப்பும்
எனக்கானதாகவே
இருக்க வேண்டும்
உன்னிதயம்

நேரம் நின்றுவிடும் போல
பார்வைகள் பேசும்
அந்த அமைதி ரொமான்ஸ்

நட்சத்திரங்களின் ஒளியை விட
கண்களின் ஒளியே
அதிகம் கவர்கிறது

இதயத்தின்
சின்ன ஓசை கூட
காதலின் இசையாக மாறுகிறது

இதயத்தின் அசைவுகளுக்குள்
அவளது பெயர்
ராகமாக ஒலிக்கிறது

பெயர் சொல்லாமலே
மனதை அழைக்கும்
ஓர் உணர்வு தான் காதல்

எண்ணம் போல்
வாழ்க்கை
வண்ணமாய் உன்னால்

சுவாசத்தின் வேகம்
ஆசையின் அடையாளம்