தொட்ட பார்வையின் நிசப்தம்
ஆசைகளை விழுங்க வைத்தது
தொட்ட பார்வையின் நிசப்தம்
ஆசைகளை விழுங்க வைத்தது
மறைந்துகொண்டே இருக்கும்
உயிருக்கு பெயர் காதல்
அது நெஞ்சில் மட்டுமில்லை
ரத்தத்திலும் கலந்திருக்கிறது
தவிக்கவிடும்
தனிமையும்
உணர்த்துகிறது
உன் நெருக்கத்தை...
சொப்பனம் காண
பிடிக்கவில்லை
நீ சொற்ப நேரத்தில்
கலைந்திடுவதால்
கற்பனையோடு
காத்திருக்கிறேன்
நித்திரை தொலைத்து
உன் முகம் காண
கட்டுப்பாடு விதிக்கா
உன் நேசத்தில்
கட்டுண்டு கிடக்கும்
என் காதலும்
காலமெல்லாம் என்னன்பே
மௌனமாக கைகளை
பிடித்த முறை
நூறு சொற்களை விட
ஆழமாகவே பதியும்
நிழலும்
நிஜமாகாதாயென
ஏங்குது மனம்
உன் பிம்பமெதிரே
தோன்ற....
உன் காதல்
எனக்கு சொந்தமானது
என்று நினைக்கும்
ஒவ்வொரு கணமும்
வாழ்க்கையின்
மிகப்பெரிய சுகம்
மூச்சு விடாமல்
பேசும்
உன் விழிகளால்
படபடக்கிறது
என் இதயம்
இரவில் நிலவாக மாறினாலும்
பரவாயில்லை
உன் கைகளில் மட்டும்
சூரியனாக ஒளிர விரும்புகிறேன்