உன் முந்தானையில்
ஒரு முகக்கவசம் கொடு
ஆயுள் முழுவதும்
ஆக்ஸிஜன் இன்றி
வாழ்கிறேன் உன்னுடன் நான்

மீண்டு விட்டேன்
என்பதைவிட
மீட்டெடுத்தாய்
என்பதே நிஜம்
வெறுமை எனும்
தனிமையிலிருந்து
அன்பால்

மெல்லிய காற்றில்
கலக்கும் மூச்சு
காதலின் தீயை பரப்புகிறது

உணர்ச்சிகள் எரியும் நேரம்
ஆசை காற்றாய் பரவுகிறது

தூரமாய் இருப்பதும்
ஒரு காரணம் தான்
உன் மீது உள்ள
அளவில்லா அன்பை
அறிந்து கொள்ள

அடி என்னவளே!
வழி தெரியாமல்
தவிக்கிறேன் உன்
உயர கூந்தலில்
சிக்கிக்கொண்டு

இதழ்களின் மௌனம் கூட
இருவிழிகளில் பேசும்
காதலை அடக்க முடியாது

நினைவுகளால் நெய்யப்பட்ட பாசம்
இருளின் நடுவிலும்
ஒரு விளக்காக வழி காட்டும்

அத்தனை கோபங்களையும்
சட்டென
கரைத்து விடுகிறாய்
உன் குறும்புகளில்

உன் அரவணைப்பில்
அடையும் அமைதி
என் வாழ்வின்
சிறந்த இசையாக மாறுகிறது