வாசிப்பது நீயென்றால்
யோசிக்காமல் எழுதுவேன்
கண்களிலும் மை கொண்டு
பல கவிதைகளை
வாசிப்பது நீயென்றால்
யோசிக்காமல் எழுதுவேன்
கண்களிலும் மை கொண்டு
பல கவிதைகளை
இதயத்தில் பூத்த மலர்கள்
வார்த்தைகளால் அல்ல
பார்வையால் மலர்கின்றன
உன்னில் பாதியான
பின்னே என்னுள்
நான் முழுமையானேன்
வாழ்க்கை முழுதும்
தங்க வேண்டும் என்ற ஆசை
ஒரு நிமிட நிசப்தத்தில் பிறந்தது
மனதோடு நீ
மழையோடு நான்
நனைகின்றது
நம் காதல்
காதலர் தின வாழ்த்துக்கள்
மூச்சின் வெப்பம் கூட
மௌனத்தை எரித்து விடுகிறது
உனக்காகவேயென்
வேண்டுதல்
நீ நலமாயிருந்தால்
நானும் நலமே...
நெஞ்சில் காற்றாக நுழைந்தாள்
பின்னாடி மூச்சே மறந்தேன்
பேசாத நேரங்களில் கூட
நெஞ்சம் நெஞ்சம்
பேசிக்கொண்டே இருந்தது
மடியில் சாய்ந்த தலையில்
கவிதைகள் பிறக்கின்றன