மழைத்துளியில் கூட
காதலரின் முகம்
பிரதிபலிக்கும் தருணம் தான்
ரொமான்ஸ்
மழைத்துளியில் கூட
காதலரின் முகம்
பிரதிபலிக்கும் தருணம் தான்
ரொமான்ஸ்
மழை தூவாது இருக்கலாம்
ஆனால் அவளின் நெருக்கம்
ஒரு வெந்நீர்க் குளியலாக இருந்தது
மூச்சின் அசைவில் கூட
பாசம் அலை போல
பரவி மனதை
மென்மையாக ஆட்கொள்கிறது
மொத்த காதலும்
நிரம்பி தளும்புது
உன்னிதழ்
பட்ட தேனீரில்
விடிந்த பின்னும்
மறையாத நிலவாக
மன வானில்
உலாவுகிறது
இரவின்
நினைவு துளிகள்
மணலில்
கிறுக்கியதை
அலைவந்து
அழித்தாலும்
நாம் மனதில்
கிறுக்கியது
மரணம்வரை
அழியாது
நிசப்தத்தின் ஆழத்தில் கூட
பாசம் ஒரு மென்மையான
வார்த்தையாக மனதில்
விழுந்து வளர்கிறது
சுகங்களை பகிர்ந்து செல்லும்
அன்பை விட சோகங்களை
பகிர்ந்து கொள்ளும் அன்பு
என்றும் உண்மையானது
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
என் விழியில் விழுந்தவனே
உன்னை துளியும் மறந்தால்
என் துடிப்பும் நின்று விடும்
உன்னுடன் கழியும்
சில மணித்துளிகள்
வானில் பறக்கிறேன்
சிறகில்லாமல்
சில நேரங்களில்
உன் மௌனம் கூட
எனக்கான சிறந்த காதல் பாடல்