விழிக்குள் விழுந்ததே
தவறு இல்லை
மனத்தில் வேரூன்றியது தான்
ஆழமான காதல்

நீரலையாய் தளும்பும்
உன் நினைவலைக்கு
சுதி சேர்கிறது
கொலுசொலியும்

விரலின் தொடுதலே
கவிதையாகியிருக்கும் நேரம் அது

பார்வையில் மறைந்து கிடக்கும்
மௌனம் தான்
காதலின் உண்மை குரல்

சொல்லத்தயங்கும்
ஆசைகளையெல்லாம்
கோர்க்கின்றேன்
உன்னிடம்
சேர்த்திட...

அழுத்தமாய் பிடிக்கப்பட்ட
விரல்களில்
வெடிக்கின்றது மனக்கிளர்ச்சி

சட்டென்று
ஒரு கவிதை
கன்ன ஏட்டில்
ரசிப்பதா ருசிப்பதா
மெய்மறந்து நான்

நீயெனை
ஏந்தி கொள்வதாலேயே
தாங்கி கொள்கிறேன்
வலிகளையும்
சுகமாய் என்னவனே

நேரமெல்லாம் பேச விருப்பம்
ஏற்படும்போது
அது காதலின் ஆரம்பம்

இயந்திர வாழ்க்கையும்
இனிமையாகிறது
என்னிதய வீணையில்
ஸ்வரங்களாய் நீயிருப்பதாலேயே