பூவோடு சேர்ந்திருக்கும்
வாசத்தை போல்
உன் நினைவோடு
சேர்ந்திருக்கிறது
என் சுவாசம்

நெற்றியில் நீ கொடுக்கும்
முத்தத்தோடு உன் மூச்சுக்
காற்றையும் சுவாசிக்கிறேன்
என் உயிர் காற்றாய்

உன் இதயத் துடிப்பில்
சிக்கிய என் காதல்
எனது மூச்சாக மாறிவிட்டது

வேறெதுவும்
வேண்டாம்
என்னவர்
ஆயுள்வரை
என் ஆயுளையும்
நீடித்துவிடு போதும்

கண்ணீர் வரும் காரணமே
சில நேரம் இனிமையாக இருக்கும்

ஆதவன் பார்வையில்
மலரும் தாமரையாய்
உனதன்பின் ஒளியில்
மகிழ்வாய் மலருது
மனம் எனதன்பே

தூரத்தில் நீயிருந்தால்
துயரத்தில் துடிக்குது
மனம்

இதயம் மட்டுமல்ல
உயிரும் உன்னிடம்
அடிமையாக
இருக்க வேண்டும் என்பதே
உண்மையான காதல்

என் கனவுகளின்
எல்லைகளிலும்
நீயே இருப்பது
காதலின் மாயம்

கண்களில் தேங்கிக்கிடக்கும்
காதலை
இதழ்களில் உதிர்துவிடு
என்னிதயமும்
கொஞ்சம்
உயிர் வாழட்டும்