தோல்வி எனும் பாடம் இல்லாமல்
வெற்றி எனும் பரீட்சை எழுத முடியாது

பொம்மையும்
உயிர் பெற்றதே
குழந்தைகளிடம் மட்டும்

சில நேரங்களில்
அமைதி தான்
மிகப்பெரிய அலறல்

மற்றவர்களை பார்த்து
பொறாமை கொண்டால்
உன் நேரம் வீணாகும்
அவர்களை கடந்துவிட முயன்றால்
வெற்றி உன்னுடையது

பரிகாசங்களை விட
பரிதாபமே நம்மை
பலவீனப்படுத்தும்

அழுகை ஒரு பலவீனம் அல்ல
அது உணர்ச்சியின்
நிறைவான வெளிப்பாடு

கால் கொண்டு
மட்டும் கடந்துவிட
முடியாத பாதை
வாழ்க்கை

எவ்வளவு தான் பாசம் வைத்தாலும்
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு
நாம் மூன்றாவது மனிதர்கள் தான்

வாழ்க்கையில் ஏற்ப்படும்
சில வலிகள் தான்
வரிகளாகிறது

சில மௌனங்கள்
பெரும் அழுகையையும்
சுமந்திருக்கின்றன