அடுத்த நொடி
மறைத்து வைத்திருக்கும்
ஆச்சரியங்களே
இந்த வாழ்க்கை
எந்த நிமிடமும்
முடிந்து போகும்
அது வரை
அன்பை விதைத்து
அறுவடை செய்

ஒருவரின் ரகசியங்களை
அவருக்கு எதிரான
ஆயுதமாக உபயோகிப்பது
தான் மிகப் பெரிய
கோழைத்தனம்

மௌனமாக இருக்கும்
கண்ணீர் கூட
உள்ளம் புரியாத பாடங்களை
சொல்லிக் கொடுக்கும்

நம்பிக்கை இல்லாத வாழ்க்கை
நிழலற்ற மரம் போல
தன்னம்பிக்கையுடன்
தொடங்கினால்
பயமும் தடையும்
வழிகாட்டிகளாக மாறும்

ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுத்து சென்றால்
காதல் வாழ்க்கை சுகமாகும்
ஒருவரை ஒருவர்
விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்தால்
நட்பு வாழ்க்கை இனிதாகும்

யாரும் எனக்காக
இல்லை என்பதை விட
யாருக்கும் நான் பாரமாக
இல்லை என்பதே உண்மை

அழகான நினைவுகள் அல்லாமல்
வலி கொடுத்த தருணங்களே
நம்மை மாற்றுகின்றன

நம்மால் முடியவில்லை என்றால்
அதனை சவாலாக
எடுத்துக் கொள்ளுங்கள்
வலியுடன் கிடைக்கும் வெற்றிக்கு
அதிக மதிப்புண்டு

முயற்சி விழுந்த இடத்தில்
முடிவடையவில்லை
அது எழும் வரை பயணம் தொடரும்

பக்குவம் வேண்டும்
என்றால் வாழ்க்கையில்
நொந்து தான் ஆகணும்