மறுக்கப்பட்ட வாய்ப்புகள்
உன்னை வலிமையாக்கும்

எல்லோரையும் சந்திக்கிறது வாழ்க்கை
ஆனால் எல்லோரையும்
புரிந்து கொள்பவன்தான்
வாழ்க்கையை வெல்கிறான்

இங்கு யாரும்
பலசாலி இல்லை
யாரோ ஒருவரின்
பலவீனத்தை பயன்ப்படுத்தி
கொண்டிருக்கிறோம்
என்பதே உண்மை

மனம் உடைந்தால் கண்ணீர் வரும்
ஆனால் அதே மனம் ஒருநாள் மலரும்

உங்களைப் புரிந்து
கொள்ளாத உறவுகளை
நெருங்காதீர்கள்
உங்களோடு நெருங்கி
வாழும் உறவுகளை
புரிந்துகொள்ளாமல் விலகாதீர்கள்

சில நேரம்
நம்மை இழக்கிறோம்
நம்மை கண்டுபிடிக்க

வாழ்க்கையை
எளிமைப்படுத்தினால்
அதில் மகிழ்ச்சி பெருகும்

கழுகுகளுடன்
பறக்க
வேண்டுமென்றால்
வாத்துகளுடன்
நீந்துவதை
நிறுத்த வேண்டும்

வாழ்க்கையை ஓட்டாதே
அதை ரசித்து நட

வாழ்க்கையும்
ஒருவகை கனவுதான்
உண்மை தெரிவதற்குள்
உன்னை ரசித்து கொள்