விமர்சனம் செய்வது உங்களுக்கு
வாடிக்கையாகிப்போன
ஒன்று தான்
உங்களோடு விவாதித்து
எனக்கு எந்த பயனும்
கிடைக்க போவதில்லை
ஆதலால் தான் கேட்டுவிட்டு
மவுனமாக
கடந்து செல்கிறேன்

அமைதியாக செயல்படுபவர்
வெற்றியை அதிக
சப்தம் இல்லாமல் அடைவார்

காலை நேரம் வருவதெல்லாம்
இரவு நேரம் வருவதற்கே
அதுபோல
கவலைகள் வருவதெல்லாம்
சந்தோஷங்கள் வருவதற்கே

விழுந்த அடிகளை
படிகளாக நினைத்தால்
எந்த உயரத்தையும்
தொட்டு விடலாம்

சோர்வை காரணமாக்கிக் கொண்டால்
கனவுகள் ஒருபோதும் பறக்காது

நம்
அன்பு ராச்சியத்தை
ஆட்சி செய்ய
கால் பதிக்கின்றாள்
குட்டி தேவதை

வெற்றி கிடைக்கும்போது
உலகம் உன்னோடு இருக்கும்
தோல்வியில் நீ
உன்னுடன் இருப்பதுதான்
உண்மையான முன்னேற்றம்

தவறான மனிதர்களால் தான்
வாழ்க்கையில் சரியான
பாடத்தை கற்றுதர முடியும்

உன் முன்னேற்றம்
அவர்களின் பொறாமைக்கு
காரணம் என்றால்
நீ சாதனை செய்துவிட்டாய்

வாழ்க்கை கடினமாக இருக்கலாம்
ஆனால் அதில் நம்பிக்கை
இருக்குமானால் திசை காணப்படும்