விதி வரைந்த பாதையில்
விடை தெரியாமல் போகிறது
என் வாழ்க்கை
புரியாத வார்த்தை
இருந்தும் பயனில்லை
புரியாத வாழ்க்கை
வாழ்ந்தும் பயனில்லை
ஆசைகள்
நம் மகிழ்ச்சியை
மெல்ல மெல்லக் கொல்லும்
நீ
எங்கு சென்றாலும்
உன்னை பற்றி
குறை கூறவே
சிலர் காத்துக்
கொண்டிருக்கும்
உலகம் இது
உன்னைப் பற்றி
குறை கூற அவர்கள்
உத்தமர்களும் இல்லை
அவர்கள் கூறியதை
எண்ணி கவலைப்பட
நீ கோழையும் இல்லை
உங்களைப் பற்றி உங்களுக்கு
முன்னால் நல்லதும் உங்களுக்குப்
பின்னால் கெட்டதும் பேசுவார்கள்
அழகிய காட்சியை
தேடாதீர்கள்
காணும் காட்சியை
அழகாக்குங்கள்
வாழ்க்கை அழகாகும்
சொற்களின்
அர்த்தங்களை விட
மௌனத்தின்
அர்த்தங்களே அதிகம்
மனம் தளராத
இடத்தில் தான்
வெற்றி மலரும்
ஒரு நாள் எல்லாமே
நம் விருப்பப்படி இருக்கும்
ஆனால் அந்த நாளுக்காக
நாம் பொறுமையாக
இருக்க வேண்டும்
நேசிக்கும்
நூறு பேரை
நேசிக்க
துவங்கினாலே
வெறுக்கும்
நான்கு பேரை
பற்றி யோசிக்க
நேரமிருக்காது
📖 பக்கம் 377 / 606
📋 Copied