பொய்யாக தோற்றமளிக்கும் சந்தோஷங்களை துரத்துவதை விட உண்மையாக கிடைக்கும் வலிகளை வரவேற்பதே உன் வாழ்க்கையை வசந்தமாக்கும்
வாழ்க்கை என்பது எத்தனை முறை விழுந்தோம் என்பதல்ல எத்தனை முறை எழுந்தோம் என்பதுதான் சிறு முயற்சிகள் கூட ஒருநாள் பெரிய சாதனையாகும் அதனால் இன்றைய நாளை நம்பிக்கையுடன் தொடங்கு
வாழ்க்கை உனக்கு வசமாவதும் அதுவே உனக்கு விஷமாவதும் உன் கையில் தான் இருக்கிறது
தனக்கென பாராமல் பிறரை மகிழ்விப்பது இயற்கை தான் செயற்கைக்காக அதனை அழிப்பது மனிதன் செய்யும் பாவம்
நிம்மதியாக வாழ்வது ஒரு திறமை எல்லாருக்கும் வராது
மனது உடையாது ஆனால் உணர்வுகள் சிதறும்
துரதிருஷ்டவசமாக சில நினைவுகள் இன்பமாக தொடங்கி வலியாக முடிவடைகின்றன
வாழ்வின் சுமை கனமாக இருப்பது அதை சுமக்கும் மனம் பலவீனமாக இருக்கிறதால்தான்
எல்லா பயணங்களும் நாம் நினைத்த இடத்தில் சென்று முடிவதில்லை வழி தவறிச் செல்லும் சில பயணங்கள் தான் நமக்கு வாழ்க்கையில் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது