✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
மாறும் உலகிற்கு
மாற்றங்கள்
தேவை தான்
மனதிற்கு அல்ல
content_copy
எதுவுமே செய்யாமல் வீணாகும்
வாழ்க்கையை விட எதையாவது
செய்யும் போது ஏற்படும்
தவறுகள் மிகவும் பயனுள்ளது
கண்ணியமானதும் கூட
content_copy
என்னதான்
நம் வாழ்வில்
ஆயிரம் மாற்றங்கள் ஏற்பட்டாலும்
அவை இழந்தநினைவுகளை
மீட்டுத்தருவதில்லை
content_copy
பொறுமை கடலினும் பெரிதாம்
அதனால்தான் பலரும் அதனுள்
இறங்க மறுக்கிறார்களோ
content_copy
குழந்தைகளின்
புன்சிரிப்புக்கு
மதி மயங்காது
யாருமே இருக்க
வாய்ப்பு இல்லை
(அழகு)
content_copy
புன்னகை மட்டுமே
கடினமான செயலைக்கூட
எளிமையாக்கும்
content_copy
அனைவரும்
அருகில் இருந்தும்
அனாதை போல்
உணர வைக்கின்றது
நாம் நேசித்தவரின் பிரிவு
content_copy
வாழ்க்கை சீராக அல்ல
சுவாரஸ்யமாக இருக்கட்டும்
content_copy
தனக்கென பாராமல் பிறரை
மகிழ்விப்பது இயற்கை தான்
செயற்கைக்காக அதனை அழிப்பது
மனிதன் செய்யும் பாவம்
content_copy
வாழ்வை எண்ணத்தில் அல்ல
அனுபவத்தில் அளக்க வேண்டும்
📖 பக்கம் 316 / 606
arrow_back
arrow_forward
📋 Copied