நமக்குள் இருக்கும் அமைதி
உலகத்தை வெல்வதற்கு
தேவையான முதல் ஆயுதம்

எதிர்பார்ப்புகள் பெரிதாக
இருந்தால் ஏமாற்றங்கள்
வலிக்கத்தான் செய்யும்

இருப்பதை யாரும்
பார்ப்பதில்லை
இல்லாததை தேடி தான்
பயணிக்கின்றனர்
இருப்பதோடுவாழ்
உனக்கு வரவேண்டியது
உன்னை வந்தடைந்தே தீரும்

உலகில் சிரிக்க வைக்க
பல விஷயங்கள் இருந்தாலும்
நம்மை அழ வைப்பதை
மட்டுமே நினைக்கிறது மனது

வெற்றியால்
மகிழ்ச்சி கிடைக்கலாம்
ஆனால் முயற்சியால்
அமைதி கிடைக்கும்

மறந்துவிட முயன்ற
நினைவுகள் தான்
அதிகம் தொந்தரவு செய்கின்றன

நிமிடம் ஒன்றின் அமைதியே
ஒரு நாளின் அமைதியை
தீர்மானிக்கும்

ஒரு மனிதனின்
நம்பிக்கை அவனது
துணிச்சலை தீர்மானிக்கும்

தோல்வி என்பது
நின்றுவிடும் இடமல்ல
திரும்ப ஓடும் தொடக்கம்

வாழ்வு ஒரு ஓவியம்
நாம்தான் அதன்
வண்ணக் கலைஞர்கள்
எந்த நிறம் தீட்டுகிறோம் என்பது
நம் கையில் தான்