வாழ்க்கை என்னும்
நதியின் இருபுறமும்
இருப்பது கரை
என்னும் நம்பிக்கை
அதில் பீறிட்டு ஓடுகிறது
விதி என்னும் வேடிக்கை
வாழ்க்கை என்னும்
நதியின் இருபுறமும்
இருப்பது கரை
என்னும் நம்பிக்கை
அதில் பீறிட்டு ஓடுகிறது
விதி என்னும் வேடிக்கை
ஆசைகள் மலை போல
குவிந்து இருக்கிறது
ஆனால் அது இருக்கும்
இடமோ பாதாளத்தில்
ஏமாற்றி
கொண்டிப்பவர்களிடம்
தினமும் ஏமாறுவது போல்
நடிப்பதும் ஒரு அன்பு தான்
வயதை பின்னுக்கு தள்ளி
வைராக்கியத்தோடு வாழும்
வயதானவர்கள் ஒவ்வொரு
வீட்டின் தன்னம்பிக்கை நாயகர்கள்
வலி என்றேன் விலகினார்கள்
நெருக்கம் கேட்டேன் நேரமில்லை
என்றார்கள் ஆனால் இன்று
குறுஞ்செய்திகளை குவித்துக்
கொண்டு இருக்கின்றனர்
அடுத்தவர்களுக்கு
கெடுதல் நினைக்காத
எல்லா நேரமும்
நல்ல நேரமே
சந்தோசம் என்பது
மற்றவர்கள் முன்
சிரிப்பது இல்லை
தனிமையில் இருக்கும் போதும்
அழாமல் இருப்பதே
வெற்றி எளிதாக வராது
ஆனால் வரும்போது
உலகமே விழிக்க செய்யும்
கொஞ்சம் மாற்றம் தோற்றத்தில்
கொஞ்சம் ஏமாற்றம் வாழ்க்கையில்
இவ்வளவுதான் வித்தியாசம்
குழந்தைப் பருவத்திற்கும்
தற்போதைய நிலைக்கும்
உலகத்திலேயே மிகவும்
விலை உயர்ந்த விஷயம்
நம்பிக்கை அதை அடைய
சில வருடங்கள் ஆகலாம்
ஆனால் உடைய சில
நொடிகள் போதும்