தேவையானவற்றை பேசி
தேவயற்றவையை வீசி
செல் பேச்சில் கட்டுப்பாடுத்
தான் வேண்டும்

எதையும் எதக்காகவும்
தூக்கி எறிந்து விடாதே
அன்பாக விட்டுக்கொடு
எல்லாவற்றையும்

நாட்கள் கடந்து போகும்
நிமிடங்களை நினைவாக
மாற்றுவது தான் வாழ்க்கை

வலிகள் அழுகையில்
மட்டும் இல்லை
சில நேரங்களில் போலி
புன்னகையின் பின்னாலும்
மறைந்து இருக்கும்

தோல்வி இல்லாத வாழ்க்கை
வெற்றி அறியாத வாழ்க்கை

கவலைகள் ஒருபோதும்
வெற்றியைத் தருவதில்லை
முயற்சிகளே

கோபம் வந்தால்
ஒரு நிமிடம்
நிறுத்தி சிந்திக்கவும்

புதிய பாதைகளைத் தேடுங்கள்
தடைகளைத் தாண்டிச் செல்லுங்கள்
அனுபவங்களை சேகரியுங்கள்
வாழ்க்கையை வாழுங்கள்

அனைத்துக்கும் காரணம்
தேடிக்கொண்டிருந்தால்
வாழ்க்கையை ரசிக்க
முடியாது

பிடித்து பழகுபவர்களை விட
பொழுது போக்காய்
நினைத்து
நடித்து பழகுபவர்களே
இங்கு அதிகம்